சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து பிராங்க் கல்பர்ட்சன் என்பவர் இந்த புகைப்படத்தை எடுத்துள்ளார்.
அமெரிக்கா நாட்டின் நியூயார்க்கில் உள்ள உலக வர்த்தக மையம் அமைந்திருந்த இரட்டை கோபுரத்தை கடந்த 2001-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11-ஆம் தேதி பயங்கரவாதிகள் விமானங்களை கொண்டு மோதி தகர்த்தனர். அத்துடன், ராணுவ தலைமையகமான பெண்டகன் மற்றும் பென்சிலிவேனியாவிலும் கொடூர தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த கோர சம்பவத்தின் 21-ஆம் ஆண்டு நினைவு தினம் நேற்று அமெரிக்காவில் அனுசரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 9/11 பயங்கரவாத தாக்குதல்களின் நினைவாக அன்றைய நாளில் நாசாவின் விண்வெளி வீரர்களில் ஒருவர் விண்வெளியிலிருந்து நியூயார்க் நகரத்தை எடுத்த புகைப்படத்தைப் நாசா டுவிட்டரில் பகிர்ந்துள்ளது. மேலும் செப்டம்பர் மாதம் 11, 2001 ஆம் ஆண்டு சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து பிராங்க் கல்பர்ட்சன் என்பவர் இந்த புகைப்படத்தை எடுத்துள்ளார். அந்த புகைப்படத்தில் மன்ஹாட்டனில் தாக்குதலின் போது பெரும் புகை மூட்டம் எழுவதைப் பார்க்க முடிகின்றது.