செப்டம்பர் 14ஆம் தேதி முதல் சிட்னி -பெங்களூரு இடையே நேரடி விமானத்தை குவாண்டாஸ் நிறுவனம் தொடங்க உள்ளது. ஆஸ்திரேலிய கேரியர் குவாண்டாஸ் சிட்னி மற்றும் பெங்களூரு இடையே விமான சேவைகளை செப்டம்பர் 14ஆம் தேதி தொடங்கும் என்றும் இந்திய கேரியர் இண்டிகோ உடன் குறியீடு பகிர்வு ஒப்பந்தத்தை இறுதி செய்து வருவதாகவும் அறிவித்துள்ளது. எந்த ஒரு விமான நிறுவனமும் ஆஸ்திரேலியாவிற்கு தென்னிந்தியாவிற்கும் இடையேயான முதல் நேரடி விமானங்கள் இதுவாகும். இது பெங்களூரு மற்றும் சிட்னி இடையே தற்போதைய வேகமான பயணத்தில் கிட்டத்தட்ட மூன்று மணி நேரத்தை குறைகின்றது. தற்போது குவாண்டாஸ் இந்தியாவிற்கு ஒரே ஒரு வழித்தடத்தில் மெல்போர்ன் மற்றும் டெல்லி இடையே வாரத்திற்கு 5 முறை விமானங்களை இயக்குகின்றது.
Categories