Categories
மாநில செய்திகள்

செப்டம்பர் 15… முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக முப்பெரும் விழா… வெளியான அறிவிப்பு…!!!

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் சென்னை கலைஞர் அரங்கத்தில் செப்டம்பர் 15ஆம் தேதி முப்பெரும் விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்: ” திமுக தலைவர் மு க ஸ்டாலின் தலைமையில் திமுக முப்பெரும் விழா வருகிற செப்டம்பர் 15ஆம் தேதி, புதன்கிழமை மாலை 5 மணி அளவில் காணொலி காட்சி வாயிலாக சென்னை கலைஞர் அரங்கத்தில் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார். அப்போது மாவட்ட கழக செயலாளர், பொறுப்பாளர்கள் தங்கள் பகுதிகளில்  காணொலி காட்சி வாயிலாக விழாவை காணும் வகையில் ஏற்பாடுகள் செய்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |