அண்ணா பல்கலைக்கழகம் செப்டம்பர் 22ம் தேதி முதல் 29ம் தேதி வரை இறுதி செமஸ்டர் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா நோய்த்தொற்று காரணமாக கல்லூரி தேர்வுகள் ரத்து செய்த நிலையில் இப்போது இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்யப்படாது என மத்திய அரசு தெரிவித்தது இதற்கு உச்சநீதிமன்றமும் உறுதி அளித்திருந்த நிலையில் இத்தேர்வானது செப்டம்பர் 22ஆம் தேதி ஆரம்பித்து 29ஆம் தேதி முடிவடையும் என அண்ணா பல் கலைக்கழகம் கூறப்பட்டுள்ளது.
இத் தேர்வு இணையவழி மூலம் தேர்வுகள் நடைபெறும் என்றும், தேர்வுக்கு கேமரா,மைக்ரோபோன் வசதி கொண்ட ஸ்மார்ட்போன், கம்ப்யூட்டர், லேப்டாப் போன்றவற்றை உபயோகித்து கொள்ளலாம் என்றும். விடையைத் தேர்வு செய்யும் வகையில் கேள்வித்தாள்கள் தயாரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது முன் மாதிரி தேர்வுகளும் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.