இலங்கையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அந்நாட்டு அதிபர் அறிவித்து வருகிறார். இந்நிலையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையும் உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் செப்டம்பர் 6ஆம் தேதி வரை நாடு முழுவதும் முழு ஊரடங்கு தொடரும் என அந்நாட்டு அதிபர் அறிவித்துள்ளார்.
கடந்த 24 நேரத்தில் மட்டும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை இலங்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்துள்ளது என்று அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.