Categories
மாநில செய்திகள்

செப்டம்பர் 8-ம் தேதி அரசு விடுமுறை…. கோவை மாவட்டத்தை தொடர்ந்து….. இந்த மாவட்டத்திற்கும்…. ஜாலி தான்….!!!!

இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமான பண்டிகை மிக பிரசித்தி பெற்றதாக இருக்கும். தமிழகத்தில் பொங்கல், தீபாவளி போன்று கேரளாவில் ஓணம் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் அனைத்து மக்கள்களால் கொண்டாடப்படுகின்றது. அந்த நாளில் புத்தாடை அணிந்து விதவிதமான உணவுப் பொருட்களை சமைத்து உறவினர்களை அழைத்து உணவிட்டு மகிழ்வார்கள். அந்த வகையில் இந்த வருடத்திற்கான ஓணம் பண்டிகை ஆகஸ்ட் 30ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 8-ம் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது. இதனால் செப்டம்பர் எட்டாம் தேதி கேரளா மாநிலம் முழுவதும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் கேரளம் மாநில எல்லையில் அமைந்திருக்கும் தமிழக மாவட்டங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. முதலில் கோவை மாவட்டத்திற்கு செப்டம்பர் எட்டாம் தேதி விடுமுறை அளிக்க பட்டிருந்த நிலையில் தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக செப்டம்பர் மாதம் இரண்டாவது சனிக்கிழமை வேலை நாளாக அறிவித்து மாவட்ட ஆட்சியர் அரவிந்த் உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |