தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் கொரோனா சற்று குறைந்து வருவதையடுத்து தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில் மூன்றாவது அலை அக்டோபரில் உச்சம் அடையும் என்று தேசிய பேரிடர் மேலாண்மை எச்சரிக்கை விடுத்ததால் மாணவர்களின் பாதுகாப்பு கேள்வி குறியாகி உள்ளது. பள்ளிகள் திறக்கும் முடிவை அரசு பரிசீலனை செய்யவேண்டும் இல்லையென்றால் மூன்றாவது அலையில் மாணவர்கள் அதிகளவில் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.