செப்டம்பர் 1 முதல் அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளின்படி சென்னை பல்கலைக்கழகம் திறக்கப்படும் என்ற பல்கலைக்கழக பதிவாளர் அறிவித்துள்ளார். கொரோனா காரணமாக பல மாதங்களாக பல்கலைகழகம் திறக்கப்படாமல் இருந்ததையடுத்து பாதிப்பு சற்று குறைந்து வருவதால் செப்டம்பர் 1 முதல் திறக்கப்படுகிறது..
மேலும் செப்டம்பர் 1ஆம் தேதி இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என மாநில கல்லூரி அறிவித்துள்ளது. ஆண்கள் விடுதி கொரோனா சிகிச்சை மையமாக செயல்பட்டு வருவதால் திறக்கப்படாது என்றும், மகளிர் விடுதி மட்டும் திறக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.