தமிழகத்தில் தியேட்டர் திறப்பது குறித்த ஆலோசனை தொடர்பாக அமைச்சர் கடம்பூர் ராஜ் கருத்து தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி தாலுக்கா அருகே இருக்கும் எட்டயபுரத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்து பேசினார் . அப்போது அவர் கூறுகையில் , தமிழகத்தில் வேகமாக அதிகரித்து வரும் கொரோனா வைரசால் பொதுமக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர் .இதனால் மாநிலம் முழுவதும் தியேட்டர்கள் மூடப்பட்டன.
தமிழகத்தில் தியேட்டர்கள் எப்போது திறக்கலாம் என்று மத்திய அரசு செப்டம்பர் 1ந்தேதி ஆலோசனை நடதுகின்றது என அமைச்சர் கடம்பூர் ராஜு கூறினார் . இந்த ஆலோசனையில் திரையரங்கம் திறக்க மத்திய அரசு என்ன வழிகாட்டுதல் சொல்கிறதோ அதன்படியே தமிழகத்தில் இருக்கும் தியேட்டர்கள் திறக்கப்படும் என்று அமைச்சர் கூறினார் .