Categories
மாநில செய்திகள்

செப். 15 முதல்…. பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை உணவு வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த காலை உணவு திட்டம் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிப்பதற்காகவும், குழந்தைகள் யாரும் ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவும், தாய்மார்களுக்கு வேலையை குறைப்பதற்காகவும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது . இந்த திட்டத்திற்காக 33.56 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த காலை உணவு திட்டத்தின் மூலமாக தமிழகத்தில் உள்ள 1545 அரசு பள்ளிகளில் படிக்கும் 1 லட்சத்து 14 ஆயிரத்து 95 மாணவர்கள் பயன்பெறுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இந்த திட்டமானது வருகிற செப்டம்பர் 15-ஆம் தேதி முதல் பள்ளிகளில் அமல்படுத்தப்படுகிறது. இதனையடுத்து பள்ளிகளில் மாணவர்களுக்கு காலை என்னென்ன உணவுகள் வழங்கப்படுகிறது என்பது குறித்து பார்க்கலாம்.

அதன்படி திங்கட்கிழமை உப்புமா மற்றும் காய்கறி சாம்பாரும், செவ்வாய்க்கிழமை சோள காய்கறி கிச்சடி, சேமியா கிச்சடி ரவா கிச்சடி போன்றவற்றில் ஏதாவது ஒன்று, புதன்கிழமை ரவா கிச்சடி அல்லது வெண்பொங்கலுடன் காய்கறி சாம்பார், வியாழக்கிழமை ஏதேனும் ஒரு உப்மாவுடன் காய்கறி சாம்பார், வெள்ளிக்கிழமை ஒரு கிச்சடியுடன் சேமியா அல்லது ரவா கேசரி வழங்கப்படும். மேலும் வாரத்தில் 2 நாட்கள் உள்ளூரில் உற்பத்தியாகும் சிறு தானியங்களால் செய்யப்பட்ட உணவு வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |