Categories
அரசியல் மாநில செய்திகள்

செப்-17 சமூக நீதிநாள்…. முதல்வரின் அறிவிப்புக்கு…. பாஜக, அதிமுக வரவேற்பு…!!!

சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க ஸ்டாலின், செப்-17 ஆம் தேதி பெரியார் பிறந்த நாள் சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என்று அறிவித்துள்ளார். 95 வயது வரை மூத்திரச் சட்டியைத் தூக்கிக்கொண்டு போராடியவர் பெரியார். அவர் நடத்திய போராட்டங்கள் யாரும் காப்பியடிக்க முடியாதவை என்று கூறியுள்ளார்.

இதற்கு பாஜகவைச் சேர்ந்த நயினார் நாகேந்திரன், கடவுள் நம்பிக்கையோடு இருக்கும் பாரதிய ஜனதா கட்சியும் பெரியார் தினமான செப்டம்பர் 17ஆம் தேதி சமூகநீதி நாளாக அறிவித்ததற்கு வரவேற்பு தெரிவிக்கிறது என்று தெரிவித்தார். அதேபோன்று அதிமுக உறுப்பினர் வைத்திலிங்கம, சாமானியனும் அரசியலுக்கு வரலாம் என்று அடித்தளமிட்டவர் பெரியார். அதனால் அதிமுகவும் முதலமைச்சரின் அறிவிப்பை மனப்பூர்வமாக வரவேற்கிறது என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |