தமிழகத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி இந்துசமய அறநிலையத்துறையிலும் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது. இந்நிலையில், சமயபுரம், திருத்தணி, திருச்செந்தூர் கோவிலில் வரும் செப்டம்பர் 17ஆம் தேதி முதல் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்படும் என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
இத்திட்டத்தின்படி காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப் பட உள்ளது. இதேபோல பழனி ஸ்ரீரங்கம் கோவில்களில் பிரசாதம் வழங்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.