பொறியியல் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடுவது செப்., 14ஆம் தேதிக்கு மாற்றப்பட்ட நிலையில், ஆன்லைன் கலந்தாய்வு 17ஆம் தேதி தொடங்குகிறது..
பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்ப பதிவு கடந்த மாதம் 24ம் தேதியுடன் நிறைவு பெற்றது.. இதில் 1.74 லட்சம் மாணவ-மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில் தற்காலிக அட்டவணையை கலந்தாய்வு நடக்கும் தொழில்நுட்ப இயக்ககம் வெளியிட்டுள்ளது.. அதன்படி தரவரிசை பட்டியல் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது. முதலில் செப்டம்பர் 17 ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தற்போது அரசு பள்ளி மாணவர்களுக்கு தொழில்நுட்ப படிப்புகளில் ஒதுக்கப்பட்ட 7.5 சதவீத ஒதுக்கீடுக்கான கலந்தாய்வும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.
பொது கலந்தாய்வு வரும் செப்., 27ஆம் தேதி முதல் அக்டோபர் 17-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதன் தொடர்ச்சியாக துணை கலந்தாய்வு அக்டோபர் 19 முதல் அக்டோபர் 23 வரை நடைபெற இருக்கிறது.. மத்திய அரசு உதவி பெறும் பட்டியலின மாணவர்களுக்கான கலந்தாய்வு அக்டோபர் 24 மற்றும் 25 இல் நடைபெற உள்ளது. மொத்தத்தில் கலந்தாய்வு அக்டோபர் 25ஆம் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.