கடந்த இரண்டு வருடங்களாக தமிழகம் முழுவதும் கொரோனா தீவிரமாக பரவி வந்து மக்களை பாடாய் படுத்தியது. இதனையடுத்து அரசு எடுத்த ஊரடங்கு உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் மூலம் பாதிப்பு படிப்படியாக குறைய தொடங்கியது. மேலும் மக்களும் முக கவசம் அணிதல், தனி மனித இடைவெளி கடைபிடித்தல், கிருமிநாசினி பயன்படுத்துதல், தடுப்பூசி போடுதல் ஆகிய பாதுகாப்பு நடவடிக்கைகளை செய்ததால் கொரோனா ஓரளவுக்கு கட்டுக்குள் வந்துள்ளது. இதற்கிடையில் தற்போது புதிய வகை வைரஸ் காய்ச்சல் பரவி மக்களிடையே அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தி வருகிறது.
ஆனால் அரசு இது குறித்து மக்கள் அச்சம் அடைய வேண்டாம் என்று தெரிவித்துள்ளது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பன்னீர்செல்வம், தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது என்று தெரிவித்துள்ளார். செப்.20இல் 496, செப். 21இல் 509, செப்.22இல் 522, செப்.23இல் 526ஆகவும் கொரோனா அதிகரித்துள்ளது. கொரோனாவுடன் டெங்கு, ப்ளூ, பன்றிக்காய்ச்சல் அதிகரித்து வருவதால் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.