இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் வாடிக்கையாளர்கள் அனைவரும் தங்களுடைய ஆதார் கார்டு- பான் கார்டு எண்களை இணைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது. அதன்படி வாடிக்கையாளர்களுடைய சிரமத்தைப் போக்கும் விதமாக செப்டம்பர்- 30-ஆம் தேதிக்குள் இணைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
ஆதார் – பான் இணைக்காத வாடிக்கையாளர்கள் வங்கி சேவைகளை பெறுவதில் சிக்கல்களை சந்திப்பார்கள் எனவும் எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது. மேலும் ஆதாருடன் பான் கார்டு இணைக்கப்படாவிட்டால் பான் கார்டு செயலற்றதாக கருதப்படும் என்பதால் ஆதார் -பான் இணைப்பு கட்டாயம் என்று தெரிவித்துள்ளது. இவ்வாறு இணைப்பதற்கு வருமான வரித் துறையின் இணையதளத்தில் உள்ள Link Aadhaar என்ற ஆப்ஷனை தேர்வு செய்து அதில் மிக எளிமையாக இணைத்துவிடலாம் என்று கூறியுள்ளது.