குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்கான அலங்கார ஊர்திகளின் தகவல்களை அனுப்ப மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
2023 குடியரசு தினவிழாவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பதற்கான மாதிரிகளை செப்டம்பர் 30ம் தேதிக்குள் அனுப்ப தமிழக உள்ளிட்ட மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சுதந்திர போராட்டம், 75 ஆண்டு சாதனை, தீர்வுகள் என்ற தலைப்பில் அலங்கார ஊர்திகளின் மாதிரிகள் இடம்பெற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு குடியரசு தினவிழாவில், வேலுநாச்சியார், பூலித்தேவன், வீரன் சுந்திரலிங்கம், மருது சகோதரர்கள் அடங்கிய தமிழக அலங்கார ஊர்தியை மத்திய அரசு புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.