மோட்டார் வரி வாகன வரி செலுத்தும் காலஅவகாசத்தை செப்-30 வரை நீடித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அனைத்து வாகனங்களுக்கும் ஆண்டுவரி மற்றும் காலாண்டு வரி ஆகியவைகளை செலுத்த ஏப்ரல் மாதம் 30-ஆம் தேதி கடைசி தேதியாக இருந்த நிலையில் கொரோனா ஊரடங்கின் காரணமாக ஜூன் மாதம் 30ஆம் தேதி வரை நீட்டித்க்கப்பட்டது.
ஆனால் தற்போது மீண்டும் பொதுமுடக்கம் காரணமாக ஆண்டு வரிக்காக காலஅவகாசம் செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் வரி செலுத்துவதில் ஏற்பட்ட சிரமங்களை கருத்தில் கொண்டு இந்த காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது.