தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் நிலையில் மூன்றாவது அலை வரலாம் என்று மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மாநில அரசுகள் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அந்த வகையில், மத்திய அரசு ஏற்கனவே அமல்படுத்தப்பட்ட வரும் செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அனைத்து மாநில பிரதேச தலைமை செயலாளருக்கும் எழுதியுள்ள கடிதத்தில், கொரோனா நிலையான இடத்திற்கு வந்துள்ளது. சில மாநிலங்களில் மட்டும் சமூக பரவலாக காணப்படுகிறது. ஒரு சில மாநிலங்களில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். வரும் நாட்களில் பண்டிகை காலங்கள் வர இருப்பதால், அதிகப்படியான கூட்டம் சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் தேவைப்பட்டால் உள்ளூர் கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.