நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் கொரோனா சற்று குறைந்து வருவதையடுத்து பல்வேறு மாநிலங்களிலும் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் ஒரு சில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து வருகிறது. தமிழகத்தில் செப்-1 முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.
இதற்கிடையில் செப்டம்பர் 5-ஆம் தேதி ஆசிரியர் தினத்திற்க்குள் அனைத்து ஆசிரியர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இதற்காக அனைத்து மாநிலங்களுக்கும் கூடுதலாக இரண்டு கோடிக்கு தடுப்பூசி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். செப் முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் ஆசிரியர்கள் கட்டாயம் தடுப்பூசி போடவும் வலியுறுத்தியுள்ளார்.