கல்லூரி மாணவிகளுக்கு மாதம் 1000 உதவி தொகை தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழக முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தில் உள்ள கல்லூரி மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூபாய் 1000 உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். அதன்படி சென்னையில் உள்ள பாரதி கலை அறிவியல் கல்லூரியில் உதவி தொகை வழங்கும் விழா நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் டெல்லி முதல் மந்திரி சிறப்பு விருந்தினராக பங்கேற்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து மாதந்தோறும் 1000 உதவித்தொகை பெறுவதற்கு 90 ஆயிரம் மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், இறுதி கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த உதவித்தொகையானது அரசு பள்ளிகளில் 6- வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்த மாணவிகளுக்கு மட்டுமே வழங்கப்படும். மேலும் தொழில் படிப்பு, பட்டப்படிப்பு, பட்டய படிப்பு போன்றவற்றில் படிக்கும் மாணவிகளுக்கு கல்லூரி படிப்பை முடிக்கும் வரை உதவி தொகை வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.