இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. இதனால் ஊரடங்கில் மாநில அரசுகள் பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் கல்லூரி மற்றும் பள்ளிகளை திறக்க மாநில அரசுகள் அனுமதி வழங்கியுள்ளது. அந்தவகையில் கர்நாடகாவில் ஏற்கனவே கடந்த 23 ஆம் தேதி 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது.
இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 2 சதவீதத்துக்கும் உள்ள தாலுகாக்களில் வரும் செப்டம்பர்-6 ஆம் தேதி முதல் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். 50 சதவீத மாணவர்களுடன் பள்ளிகளில் மாணவர்களுக்கு வகுப்பு நடத்தப்படும் என்றும், வாரத்தில் ஐந்து நாட்கள் பள்ளிகள் செயல்படும் என்றும், முகக் கவசம் கட்டாயம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.