நாடு முழுவதும் தீவிரமாக பரவி வந்த தொற்று காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் எடுக்கப்பட்டு வந்தது. மேலும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்பட்டது. தற்போது நிலைமை படிப்படியாக சரியாகி வருவதால் பள்ளிகள் கல்லூரிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் அனைவருக்கும் நேரடி வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றது.
வரும் செமஸ்டருக்கான தேர்வு நேரடி எழுத்து தேர்வாக நடத்தப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இறுதியாண்டு மாணவர்கள், தொலைதூர கல்வி மாணவர்கள், அரியர் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு நேரடியாக நடத்தப்படும். internal, practical, viva -voice தேர்வுகளும் நேரடியாகவே நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.