தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த வருடம் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டது. இதனையடுத்து பள்ளி மாணவர்களுக்கு தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் செமஸ்டர் தேர்வு நடைபெற்றது. இதையடுத்து கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வந்ததை அடுத்து பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டது.
ஆனால் தற்போது கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் காரணமாக மீண்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு ஜனவரி 31ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடத்த உயர் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்தது. அதன்படி பிப்ரவரி 1 முதல் 20 ஆம் தேதி வரை ஆன்லைனில் மூலம் செமஸ்டர் தேர்வு நடைபெற உள்ளது. இந்நிலையில் கல்லூரி மாணவர்களின் ஆன்லைன் செமஸ்டர் தேர்வு வழிகாட்டு நெறிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
# கல்லூரி மாணவர்கள் ஏ4 காகிதங்களில் மட்டுமே 40 பக்கங்களுக்கு மிகாமல் எழுத வேண்டும்.
# தேர்வு முடிந்த ஒரு மணி நேரத்திற்குள் விடைத்தாளை மின்னஞ்சல் இணையதளம்/ வாட்ஸ் அப் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.
# கருப்பு அல்லது நீல நிற பேனாவில் மட்டுமே தேர்வு எழுத வேண்டும்.
# வினாத்தாள் கிடைத்ததும் வாட்ஸ்அப் குழுவில் டவுன்லோட் என்று டைப் செய்து உறுதிசெய்ய வேண்டும்.
# நேரம் காலை 10-1 மணிவரை, பிற்பகல் 2-5 மணிவரை
# பல்கலைக்கழக வினாத்தாள்கள் அந்தந்த கல்லூரி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.
#பல்கலைகழக இணையத்திலும் பதிவேற்றப்படும்
# வினாத்தாள் காலை 9.30- 10.30 மணி வரையிலும் பிற்பகல் தேர்வுக்கு 1.30- 2.30 மணி வரையிலும் மட்டுமே கிடைக்கும்.