தமிழகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் மூலமாக நடைபெறும் என உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் முதுநிலை மாணவர்களுக்கு மட்டும் இன்று முதல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் அனைத்தும் திறக்கப்படுவதால் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் இன்று கல்லூரிகள் உட்பட்ட உயர்கல்வி நிறுவனங்களை திறக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் 8 மாதங்களுக்கு பிறகு முதலாம் ஆண்டு மாணவர்களை தவிர இளநிலை மற்றும் முதுநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கியுள்ளன. இந்நிலையில் கல்லூரிகள் திறக்கப்பட்டாலும் நடந்து செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் மூலமாக நடைபெறும் என உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது. இறுதி ஆண்டு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் கல்லூரிகளிலேயே நேரடியாக நடைபெறும் என்றும் நடப்பு கல்வியாண்டில் தொலைதூர கல்வியில் சேர்வதற்கு டிசம்பர் 31-ஆம் தேதி வரை http://online.ideunom.ac.in என்ற இணையதளம் மற்றும் பல்கலைக்கழகங்களில் 115 உதவி மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.