Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

செமி பைனலில் இந்தியா தோற்றதற்கு காரணம்…. “இந்த ரெண்டுமே இல்ல”…. மேத்யூ ஹைடன் சொன்னது..!!

டி20 உலகக் கோப்பை : இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியாவின் தோல்விக்கு என்ன வழிவகுத்தது என்பது குறித்து மேத்யூ ஹைடன் கூறியுள்ளார்.

ஐசிசி டி20 உலக கோப்பை இரண்டாவது அரையிறுதியில் நேற்று முன்தினம்அடிலெய்டு ஓவல் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் பந்து வீச முடிவு செய்ய, அதன்படி களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் படலர் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் இருவரின் அதிரடியால் 16 ஓவரில் விக்கெட் விக்கெட் இழப்பின்றி 170 ரன்கள் குவித்து அபார வெற்றி பெற்றது.

இதனால் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து. அ இந்நிலையில் இந்திய அணி தோல்வி அடைந்ததை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். இந்திய அணி ரசிகர்கள் அணி தேர்வு சரி இல்லை என்றும், இவரை களம் இறக்கியிருக்கலாம், அவரை களம் இறக்கி இருக்கலாம் என தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர்.. மேலும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் இந்திய அணி தோல்வி குறித்து  தங்களது கருத்துக்களையும் கூறி வருகின்றனர்.

இந்நிலையில 2022 டி20 உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணியின் ஆலோசகர் – இங்கிலாந்துக்கு எதிரான டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் இந்தியாவின் தோல்வி குறித்து மேத்யூ ஹைடன் கருத்து தெரிவித்துள்ளார். மெல்போர்னில் இங்கிலாந்துக்கு எதிரான பாகிஸ்தானின் இறுதிப் போட்டிக்கு முன்னதாக ஊடகங்களிடம் பேசிய ஹெய்டன், இந்தியாவின் 6ஆவது பந்துவீச்சு விருப்பம் இல்லாததால் அரையிறுதியிலிருந்து வெளியேறினர் என்றார்.

இதுகுறித்து அவர் பேசியதாவது, “அந்த இரவில் இந்தியா உண்மையில் தவறவிட்ட விஷயங்களில் ஒன்று ஆடும் லெவனில் லெக்-ஸ்பின்னர் இல்லாதது, அதேபோல 6ஆவது பந்துவீச்சாளரும் இல்லாதது தோல்விக்கு காரணம். எங்களது (பாகிஸ்தான்) தரப்பில் 6 பந்துவீச்சாளர்கள் உள்ளர், அதுமட்டுமில்லாமல் 7ஆவதாக இஃப்திகார் ஆப் ஸ்பின் வீசக்கூடியவராக இருக்கிறார். எனவே, எல்லா அம்சங்களும் நன்றாக இருக்கிறது என்று நான் நினைக்கிறேன், என இரு தரப்பையும் ஒப்பிட்டார்.

பாகிஸ்தான் தனது முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வியை தழுவிய நிலையில் மீண்டும் களமிறங்கியது. நெதர்லாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு எதிரான முக்கியமான ஆட்டங்களில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்த அணி, பின்னர் நியூசிலாந்தை வீழ்த்தி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது.

நவம்பர் 13, (நாளை) ஞாயிற்றுக்கிழமை மெல்போர்னில் இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகள் பைனலில் மோதுகிறது. மெல்போர்னில் மழை பெய்யும் என வானிலை மையம் கணித்துள்ளது. இதன் காரணமாக அந்த போட்டி பாதியில் அல்லது முழுவதும் நிறுத்தப்பட்டால் நவம்பர் 14ஆம் தேதி ரிசர்வ் நாளாக போட்டி நடைபெறும். ரிசர்வ் நாளிலும் மழை வந்தால் இரு அணிகளும் வெற்றியாளர்கள் என அறிவிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |