பவ்யா ஸ்ரீஜி மாடலாக தனது பயணத்தை தொடங்கி விளம்பரப் படங்கள் மற்றும் குறும்படங்கள் ஆகியவற்றில் நடித்துள்ளார். இவர் தற்போது சீரியல் நடிகராக நடித்து வருகிறார். தமிழில் ஒளிபரப்பாகும். தமிழில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியலான ‘திருமதி ஹிட்லர்’ ல் அமிதாப் மற்றும் கீர்த்தனா முன்னணி வேடங்களில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் சித்ரா என்ற கதாபாத்திரத்தில் பவ்யா ஸ்ரீ நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.
இந்நிலையில் இவர் நடிக்கும் புதிய சீரியல் குறித்து ஒரு ஷீட்டிங் புகைப்படத்துடன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் பகிர்ந்துள்ளார். அதில், ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட்டான சீரியல்களில் ஒன்றான செம்பருத்தி சீரியலில் ஷோபனா பிரியா ராமன் உள்ளிட்ட நடித்து வருகிறார். இந்த தொடர் 1200 எபிசோடுகளை நெருங்கி வருகிறது. இந்தத் தொடரில் புதுமுகமாக இவர் இணைந்துள்ளார். புது சீரியலில் இணைந்த இவருக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.