Categories
சினிமா தமிழ் சினிமா

செம்பருத்தி ஷபானாவுக்கு இன்று திருமணம்… அவரே வெளியிட்ட வீடியோ… குவியும் வாழ்த்துக்கள்…!!!

செம்பருத்தி சீரியல் நடிகை ஷபானா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த சீரியலில் அக்னி கதாநாயகனாகவும், ஷபானா கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். நடிகை ஷாபனாவும் பிரபல சீரியல் நடிகர் ஆர்யனும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டது . தற்போது ஆர்யன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் செழியன் என்ற கேரக்டரில் நடித்து வருகிறார்.

https://www.instagram.com/p/CWHqfPeFkPq/?utm_source=ig_embed&ig_rid=50a3260e-a0a7-4241-b5cc-5ed779ce123b

சமீபத்தில் ஷபானா, ஆர்யன் இருவரும் தங்கள் காதலை இன்ஸ்டாகிராமில் உறுதிப்படுத்தினர். இந்நிலையில் ஷபானா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இன்று தனக்கு திருமணம் நடப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் காதலித்து திருமணம் செய்து, சென்னையிலேயே செட்டில் ஆவேன் என நினைக்கவே இல்லை என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

Categories

Tech |