Categories
தேசிய செய்திகள்

செம்மரம் கடத்தி வந்த சுமோ கார்… விபத்தில் ஏற்பட்ட தீ… உடல் கருகி 4 பேர் பலி…!!!

ஆந்திராவில் செம்மரத்தை கடத்தி வந்த சுமோ கார் விபத்து ஏற்பட்டு தீப்பற்றி எரிந்ததால் 4 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஆந்திர மாநிலத்தில் உள்ள கடப்பா விமான நிலையம் அருகே இன்று அதிகாலை டீசல் டேங்கர் லாரி மற்றும் சுமோ வாகனம் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் விபத்து ஏற்பட்டது. அப்போது டேங்கர் லாரியில் இருந்த டீசல், சுமோ வாகனம் மீது கொட்டியதால் தீப்பிடித்து எரிந்தது. அதனால் வாகனத்தில் இருந்த நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில் பின்னால் வந்து கொண்டிருந்த மற்றொரு கார் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

அதில் பயணம் செய்த 3 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், எரிந்த நிலையில் இருந்தால் சுமோ வாகனத்தை சோதனை செய்ததில், அதில் செம்மரம் கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து செம்மரத்தை கடத்தியவர்கள் பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Categories

Tech |