ஆந்திர வனப்பகுதியில் செம்மரம் வெட்டுவதற்காக சென்ற தமிழகத்தை சேர்ந்த 80 பேரை பிடிப்பதற்கு வனத்துறை அதிகாரிகள் வலை வீசியுள்ளனர்.
ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டத்தில் உள்ள ராஜம்பேட்டை வன சரகத்திற்கு உட்பட்ட ராலமடுகு வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டி கடத்தி செல்ல முயன்றவர்களை வனத்துறையினர் விரட்டிப் பிடிக்க முயற்சி செய்தனர். அதில் 8 பேரை மடக்கிப் பிடித்த வனத்துறையினர்,அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. அதன் பிறகு அவர்களை வனத்துறையினர் கைது செய்தனர். அந்த நபர்களிடமிருந்து 10 டன் செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அதன் மதிப்பு கிட்டத்தட்ட 2 கோடி இருக்கும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.கைது செய்யப்பட்ட நபர்களின் 15 வயதுக்குட்பட்ட நபர்களும் உள்ளடங்கியுள்ளனர். அதுமட்டுமன்றி கைதானவர்களை விசாரணை செய்ததில் கடந்த 24 ஆம் தேதி வனப்பகுதியில் செம்மரம் வெட்டுவதற்காக தமிழகத்தை சேர்ந்த 50 பேர் கொண்ட குழு சென்றதாக அவர்கள் கூறியுள்ளனர். அவர்களை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.