Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

செம்மையான அறிவிப்பு…! இனி இந்தியாவில் கிளை… உலகளவில் மாஸ் …!!

இந்தியாவில் உலக சுகாதார அமைப்பின் கிளை தொடங்கப்படும் என பட்ஜெட் உரையில் நிதி அமைச்சர் தெரிவித்தார்.

மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்த பட்ஜெட்டில் ஆரோக்கியம், மாசுபாடு, உற்பத்தித்துறையில் பிரத்யேக நிதி ஒதுக்கீடுகளை எதிர்பார்க்கலாம். பழைய வாகனங்களில் இருந்து வரும் மாசுபாட்டைக் குறைக்க, அதை தடை செய்ய பரிந்துரைத்துள்ளோம்3,382 பொதுசுகாதார மையங்கள் 11 மாநிலங்களில் கொண்டு வரப்பட்டுள்ளது.

தற்சார்பு சுகாதாரத் திட்டத்திற்கு ரூ. 66,180 கோடி, தற்காப்பு, குணப்படுத்துதல், முறையான சிகிச்சை ஆகிய 3 அம்சங்களில் கவனம். விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவதே அரசின் இலக்கு. இந்தியாவில் உலக சுகாதார அமைப்பின் கிளை தொடங்கப்படும். கொரோனா தடுப்பூசிக்கு ரூ.35ஆயிரம் கோடி ஒதுக்கீடு. அடுத்த 3 ஆண்டுகளில் 7 ஜவுளிப் பூங்காக்கள் தொடங்கப்படும்.

அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்கும் திட்டத்திற்கு ரூ. 2.87 லட்சம் கோடி ஒதுக்கீடு. தனிநபர் வாகனங்களுக்கு 20ஆண்டுகளுக்குப் பின் தர சோதனை. நாட்டில் போக்குவரத்துத்துறையில் 7 ஆயிரம் கோடி சொத்துக்கள் உள்ளன. விமானபோக்குவரத்துத்துறை, ரயில்வே துறை ஆகியவற்றில் தேவைப்படும் எரிபொருள்களுக்கு உரிய நிதி ஒதுக்கீடு உண்டு என தெரிவித்தார்.

Categories

Tech |