சமையல் எண்ணெய் தட்டுப்பாட்டினால் பண்டமாற்று முறைக்கு திரும்பிய நகரம்.
ஐரோப்பா நாட்டில் சமையல் எண்ணெய் தட்டுப்பாடு அதிகரித்து கொண்டு வருகின்றது. இந்நிலையில் முனி நகர மதுபான விடுதி ஒன்றில் பண்டமாற்று முறைக்கு திரும்பியுள்ளது. இந்த முனி நகர மதுபான விடுதியில் வாடிக்கையாளர்கள் அருந்தும் பீருக்கு கட்டணமாக சமையல் எண்ணெய் வாங்கப்படுகின்றது. உலக நாடுகள் பயன்படுத்தும் சூரியகாந்தி எண்ணெயில் 80 சதவிகிதம் உக்ரைன் மற்றும் ரஷ்யாவிலிருந்தே ஏற்றுமதி செய்யப்படுகின்றது. கடந்த பிப்ரவரி மாதம் ரஷ்யா அதன் அண்டை நாடான உக்ரைன் மீது படையெடுத்ததிலிருந்து ஜேர்மனி, ஐரோப்பா உள்பட பல நாடுகள் சமையல் எண்ணெய், எரிவாயு போன்ற பொருள்கள் பற்றாக்குறையால் மக்கள் தத்தளித்து வருகின்றனர்.
இதனை தொடர்ந்து முனி நகர மதுபான விடுதி ஒன்றில் பண்டமாற்று முறைக்கு திரும்பும் வித்தியாசமான முடிவுக்கு வந்துள்ளது. அதன்படி, ஒரு லிட்டர் சூரியகாந்தி எண்ணெய்க்கு பதிலாக பீர் பிரியர்களுக்கு தங்களுக்கு பிடித்த அதே அளவு பீர் வழங்கப்படுகின்றன. சமையல் எண்ணெய் கையிருப்பு மொத்தமாக காலியான நிலையிலேயே இந்த முடிவுக்கு வந்ததாக அந்த மதுபான விடுதி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். உக்ரைன் மீது ரஷ்யாவின் படையெடுப்புக்கு பின்னர் சூரியகாந்தி எண்ணெய் பற்றாக்குறை மிக அதிகமாக காணப்படுகின்றது. அந்நாட்டின் பல அங்காடிகளும் வணிக வளாகங்களும் வாடிக்கையாளர்களுக்கு எண்ணெய் போத்தல்களில் கட்டுப்பாடு விதித்துள்ளது. ஒரு வாரத்திற்கு 30 லிட்டர் எண்ணெய் தேவைப்படும் என்ற நிலையில் 15 லிட்டர் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றால் உணவு தயாரிக்க முடியாமல் போகும் என தெரிவித்துள்ளார் மதுபான விடுதி மேலாளர்.
இங்கு பண்டமாற்று முறை அறிமுகம் செய்த பின்னர் இதுவரை 400 லிட்டர் எண்ணெய் வாடிக்கையாளர்களால் மாற்றப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஜேர்மன் மதுபான விடுதிகளில் ஒரு லிட்டர் பீர் 7 யூரோவிற்கு விற்கப்படுகின்றது. ஆனால் ஒரு லிட்டர் சூரியகாந்தி எண்ணெய் 4.5 யூரோவிற்கு மட்டுமே விற்கப்படுகிறது. இதுவே வாடிக்கையாளர்களை அதிகம் தூண்டியிருக்கலாம் எனவும் கூறப்படுகின்றது. மேலும் உக்ரைனுக்கு மனிதாபிமான நடவடிக்கை காரணமாக சென்ற ஒருவர் அங்கிருந்து 80 லிட்டர் சூரியகாந்தி எண்ணெய் வாங்கி வந்த நிலையில், அதை மொத்தமாக தமது பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கான பீர் வாங்க அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.