தமிழக சட்டமன்ற தேர்தல் நடத்துவது எப்போது எப்போது குறித்த தகவலை வெளியாகியுள்ளது.
தமிழக சட்டமன்றத்தின் பதவிக்காலம் வருகிற மே 24ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் 234 தொகுதி சட்டமன்ற தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ளது. அதற்கான பணிகளை அரசியல் காட்சிகள் தொடங்கிவிட்டன. கூட்டணி பேச்சுவார்த்தைகள், கூட்டணி ஆலோசனை இது போன்ற பல்வேறு விஷயங்கள் அரசியல் களத்தில் நடந்து வருகிறது. அதேசமயம் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. இது கொரோனா காலம் என்பதால் தகுந்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டியது அவசியமாகிறது.
எனவே கூடுதல் கவனத்துடன் தேர்தல் ஆணையம் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி பிப்ரவரி இறுதி வாரத்தில் அறிவிக்கப்படும் என்று செய்து வெளியாகியுள்ளது. ஏப்ரல் கடைசி வாரத்தில் ஒரே கட்டமாக தேர்தலை நடத்தவும், வாக்கு எண்ணிக்கை மே 10ஆம் தேதிக்குள் நடத்தவும் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.