Categories
தேசிய செய்திகள்

செம குஷியில் மாணவர்கள்…. பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு…. மாநில அரசு அதிரடி…!!!!

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 16ம் தேதி அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் புத்தாண்டு மற்றும் புனித வெள்ளி விடுமுறையை தொடர்ந்து சனிக்கிழமையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் ஏப்ரல் 16-ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல்-14 தமிழ்ப்புத்தாண்டு, ஏப்ரல்-15இல் புனித வெள்ளி என அடுத்தடுத்து விடுமுறை என்பதால் ஏப்ரல் 16ஆம் தேதி புதுச்சேரி காரைக்காலில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது. ஏப்ரல்-17 ஞாயிறு விடுமுறை என்பதால் நான்கு நாட்கள் பள்ளிக்கு தொடர் விடுமுறை ஆகும்.

Categories

Tech |