மின் கட்டண மையங்களில் கியூ ஆர் கோடு எனப்படும் ரகசிய குறியீட்டை ஸ்கின் செய்து அதன் மூலம் பணம் செலுத்தும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதனைப் பயன்படுத்தி மின் கட்டண வசூல் மையங்கள், அரசு இ-சேவை மையங்கள், தபால் நிலையங்கள் சில வங்கிகளில் நேரடியாக மின் கட்டணம் செலுத்தலாம்.
இந்த முறை முதன்முதலில் சென்னையில் அறிமுகம் செய்யப்படும் என்றும் அதனைத் தொடர்ந்து கோவை மற்றும் மற்ற நகரங்களில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கூகுள் பே மற்றும் மொபைல் வாலட் வழியாகவும் பணம் செலுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது.