மதுரை மாவட்டத்திற்கு ஏப்ரல் 16-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் சார்பாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மதுரை சித்திரைத் திருவிழாவின் முத்தாய்ப்பாக கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழா கொண்டாடப்படுகின்றது. இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு மதுரை மாவட்ட பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மதுரை சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு பல்வேறு பகுதிகளுக்கு நாளை முதல் 19ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சிவகங்கை, விருதுநகர் மற்றும் திருமங்கலம் மேலூர், உசிலம்பட்டி, வாடிப்பட்டி, திருப்புவனத்தில் இருந்து 75 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.