பாண்டியன் ஸ்டோர் சீரியலில் தனத்திற்கு பிறந்தது போல் காட்டப்பட்ட குழந்தையின் புகைப்படம் வெளியாகியுள்ளது .
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் சீரியலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த சீரியலில் சுஜிதா, ஸ்டாலின், காவியா, குமரன், சரவண விக்ரம் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். மேலும் 4-வது வருடத்தில் இந்த சீரியல் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. சமீபத்தில் இந்த சீரியலில் அம்மா கேரக்டரில் நடித்து வந்த லட்சுமி மரணம் அடைந்தது போல் கட்டப்பட்டது. தற்போது மூத்த அண்ணி தனத்திற்கு பிரசவ வலி ஏற்படுவது போல் புரோமோ வெளியாகியுள்ளது.
இந்நிலையில் தனத்திற்கு பிறந்ததாக காட்டப்பட்ட குழந்தையின் புகைப்படம் வெளியாகியுள்ளது. அதாவது பாண்டியன் ஸ்டோர் சீரியல் இயக்குனர் தனது பிறந்தநாளை சீரியல் செட்டில் கொண்டாடியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தில் தனத்திற்கு பிறந்ததாக காட்டப்பட்ட குழந்தையை மீனா கையில் வைத்திருக்கிறார். இந்த அழகிய புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.