பாரதிகண்ணம்மா சீரியல் நடிகை ரோஷினியின் அழகிய புகைப்படம் வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதிலும் குறிப்பாக பாரதிகண்ணம்மா சீரியல் டிஆர்பி யில் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது . இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து வரும் ரோஷினிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில் நடந்து முடிந்த விஜய் விருது விழாவில் சிறந்த நடிகைக்கான விருது இவருக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் நடிகை ரோஷினி அவ்வப்போது தனது அழகிய புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் முழு மேக்கப் போட்டுக்கொண்டு ரோஷினி வெளியிட்டுள்ள இந்த அழகிய புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.