ஜீ தமிழ் சீரியல் நடிகைகள் இணைந்து எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது பூவே பூச்சூடவா, யாரடி நீ மோகினி, செம்பருத்தி ஆகிய சீரியல்கள் சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கிறது . இந்த சீரியல்களில் நடித்து வரும் ஷபானா, ரேஷ்மா, சைத்ரா, நட்சத்திரா ஆகியோர் மிகவும் நெருங்கிய தோழிகள். இவர்கள் அடிக்கடி ஒன்றாக இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
மேலும் இவர்களுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் ஷபானாவை தவிர மற்ற நடிகைகள் அனைவரும் ஒன்றாக இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. புடவையில் குரூப்பாக இவர்கள் எடுத்துக் கொண்ட இந்த அழகிய புகைப்படம் தற்போது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.