உலகில் உள்ள அனைவரையும் இணைக்கும் ஒரு அற்புதமான செயலியாக “பேஸ்புக்” உள்ளது. இதன் மூலம் நம்மால் நல்ல பயனுள்ள கருத்துக்களை பகிரவும், தெரிந்து கொள்ளவும் முடியும். அதேசமயம் இந்த பேஸ்புக்கில் ஆபத்தும் உள்ளது. அதாவது இந்த செயலி மூலம் மற்றவர்கள் நம்மை உளவு பார்க்க வாய்ப்புள்ளது. எனவே பேஸ்புக் பயனாளர்கள் இந்த செயலியை முழு மனநிறைவுடன் பயன்படுத்த முடிவதில்லை. இந்த நிலையில் பயனாளர்களின் நலன் கருதி ஃபேஸ்புக் புதிய அப்டேட் ஒன்றை வெளியிட உள்ளது.
அதாவது பிறரால் உளவு பார்க்க முடியாத அளவிற்கு பேஸ்புக் புதிய அப்டேட் ஒன்றை வெளியிட உள்ளது. இதன் மூலம் நீங்கள் ஒருவருக்கு அனுப்பும் குறுஞ்செய்தியை யாரும் ( பேஸ்புக் உட்பட ) உளவு பார்க்காத வண்ணம் “என்கிரிப்ட்” செய்யப்படும். அதோடு மட்டுமில்லாமல் நீங்கள் அனுப்பும் குறுஞ்செய்தியை ஸ்கிரீன்ஷாட் எடுத்தால் அது உடனடியாக உங்களுக்கு தெரியும். அதேபோல் போட்டோ, வீடியோ உள்ளிட்டவை தானாகவே டெலிட் ஆகும் வகையில் சூப்பர் அம்சங்களும் அறிமுகமாக உள்ளது.