Categories
சினிமா

“செம என்ட்ரி கொடுக்க போகும் பிரபலத்தின் மகன்”…. மாஸான 3 நட்சத்திர வாரிசுகள் கூட்டணி….!!!

தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் 2025ல் சினிமாவிற்கு என்ட்ரி கொடுக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் தளபதி விஜய். இவரின் திரைப்படம் அனைத்தும் பெரிய ஹிட்டாகி வரும் நிலையில், அண்மையில் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் மிக பிரமாண்டமாக வெளியாக உள்ளது. மேலும் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் பற்றிய சுவாரஸ்யமான தகவல் இணையத்தில் பரவி வருகிறது. அதன்படி சஞ்சய் தனது படிப்பை லண்டனில் முடித்துவிட்டு திரும்பியுள்ள நிலையில் சினிமாவுக்கு வரப்போவதாக பல தரப்பினர் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் விஜயின் மகன் சண்டை மற்றும் டான்ஸ் பயிற்சியை  சீக்கிரமே தொடங்க உள்ளதாகவும், தற்போது உலக சினிமா படங்களெல்லாம் பார்த்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். அநேகமாக 2025-ல்  இவரது என்ட்ரி இருக்கும் எனவும் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து விக்ரம் மகன் துருவ் மற்றும் விஜய் மகன் சஞ்சய் இருவரும் அடிக்கடி சேர்ந்து இருக்கிறார்கள். மேலும் ஏ.ஆர். ரஹ்மானின் மகன் அமீன்னும் இவர்களது கூட்டணியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

Categories

Tech |