குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே முதல் புரோமோ வெளியாகியுள்ளது .
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது . மேலும் இறுதிப்போட்டிக்கு கனி, அஸ்வின், பாபா பாஸ்கர், சகிலா, பவித்ரா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் இந்த சீசனின் வெற்றியாளர் யார் என்பதை காண ரசிகர்கள் மிகுந்த ஆவலில் உள்ளனர்.
😍 #CookWithComali #GrandFinale 😍
குக்கு வித் கோமாளி – ஏப்ரல் 14 மதியம் 2 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #VijayTelevision pic.twitter.com/eh6Gns6Qdr
— Vijay Television (@vijaytelevision) April 7, 2021
இந்நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி கிராண்ட் பினாலேவின் முதல் புரோமோ வெளியாகியுள்ளது. இதில் நடிகர் சிம்பு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார். மேலும் அவர் கோமாளிகளுடன் செம ஜாலியாக இந்த நிகழ்ச்சியை கொண்டாடியுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.