குக் வித் கோமாளி பிரபலம் சிவாங்கி தனது அம்மா மற்றும் தம்பியுடன் சிறு வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் சிவாங்கி. இதையடுத்து இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டு ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இதைத் தொடர்ந்து இவர் இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனிலும் கோமாளியாக கலக்கி வந்தார். சமீபத்தில் இரண்டாவது சீசன் வெற்றிகரமாக நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது சிவாங்கி நடிகர் சிவகார்த்திகேயனின் டான் படத்தில் நடித்து வருகிறார்.
மேலும் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில் நடிகர் உதயநிதி நடிப்பில் உருவாகும் ஆர்ட்டிகள் 15 படத்தில் சிவாங்கி இணைந்துள்ளார் . இந்நிலையில் சிவாங்கி தனது அம்மா மற்றும் தம்பியுடன் சிறுவயதில் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் வெளியாகியுள்ளது. சிவாங்கி பிரபல பின்னணி பாடகி பின்னி கிருஷ்ணகுமாரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.