குக் வித் கோமாளி பிரபலம் சிவாங்கியின் சிறுவயது புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது .
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த நிகழ்ச்சியின் 2-வது சீசன் தற்போது மிக கலகலப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் சிறப்பாக சமைத்த அஸ்வின், கனி, பாபா பாஸ்கர் ஆகிய மூவரும் இறுதி சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டனர் . மேலும் வரும் வாரம் வைல்ட் கார்ட் என்ட்ரி நடைபெற உள்ளது .
இதில் இந்த நிகழ்ச்சியிலிருந்து எலிமினேட் செய்யப்பட்டு வெளியேறிய மதுரை முத்து, தீபா, பவித்ரா, சகிலா, ரித்திகா, தர்ஷா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். மேலும் இந்த நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த சிவாங்கி, புகழ், தர்ஷா உள்ளிட்டோருக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்துள்ளது. இந்நிலையில் ஏராளமான ரசிகர்கள் மனதை கவர்ந்த சிவாங்கியின் குழந்தைப்பருவ புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.