சீரியல் நடிகை ஆலியா மானசா தனது மகளின் அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ராஜா ராணி என்ற சீரியலில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஆலியா மானசா. இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. மேலும் இந்த சீரியலில் ஹீரோவாக நடித்த சஞ்சீவை ஆலியா காதலித்து திருமணம் செய்து கொண்டார் . மிக எளிமையான முறையில் இவர்கள் திருமணம் நடைபெற்றது.
இதையடுத்து இந்த நட்சத்திர ஜோடிக்கு ஒரு அழகிய பெண் குழந்தை பிறந்தது. இதன்பின் தனது மகளின் அழகிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவ்வப்போது ஆலியா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு வந்தார். இந்நிலையில் வெள்ளை நிற உடையில் ஆலியாவின் மகள் ஐலா செம கியூட்டாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது .