பாக்கியலட்சுமி சீரியல் எழிலின் குழந்தை பருவ புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த சீரியலில் சுசித்ரா கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் சதீஷ், வேலு லட்சுமணன், நேகா மேனன், ரித்திகா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். படிக்காத ஒரு குடும்பத்தலைவியான பாக்கியலட்சுமியை அவரது கணவர், மாமியார், குழந்தைகள் அனைவரும் அவமதிக்கிறார்கள். இவை எல்லாவற்றையும் அனுசரித்து போகும் பாக்கியலட்சுமி ஒரு கட்டத்தில் தனக்கான சுயமரியாதையை எப்படி மீட்டெடுக்கிறார் என்பதுதான் இந்த சீரியலின் கதை .
இதனால் இந்த சீரியல் குடும்பத் தலைவிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. தற்போது இந்த சீரியல் மிக விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. மேலும் இந்த சீரியலில் எழில் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் விஷாலுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் எழிலின் குழந்தை பருவ புகைப்படம் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.