Categories
உலக செய்திகள்

“செம கியூட்”…. பிரபல தொலைக்காட்சி நேரலையில்…. குழந்தையுடன் செய்தி வாசித்த பெண்…. வைரலாகும் போட்டோ….!!

அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சியில் வேலை செய்யும் பெண் ஒருவர் தனது குழந்தையை கையில் வைத்து கொண்டு செய்தி வாசித்த போட்டோ வைரலாகி வருகிறது. 

Wisconsin மாநிலத்தில் Milwaukee நகரைச் சேர்ந்தவர் Rebecca Schuld. இவர் அமெரிக்காவின் பிரபலமான தொலைக்காட்சி ஒன்றில் வானிலை ஆராய்ச்சியாளராக பணியாற்றி வருகிறார். தற்போது கொரோனா தொற்று காரணமாக வீட்டிலிருந்தே வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று காலை அவர் தினமும் செய்வதுபோல் பணியைத் தொடங்கியுள்ளார். அந்த சமயத்தில் அவரது மூன்று மாதக் கை குழந்தையான Rebecca வின் சத்தம் திடீரென்று கேட்டது. இதனை தொடர்ந்து அவர் தனது குழந்தையை கையில் வைத்தவாறு வானிலை அறிக்கையை தொகுத்து வழங்கினார்.

Categories

Tech |