நடிகர் சதீஷ் தனது மகளுடன் கொஞ்சி விளையாடும் வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் சதீஷ். தற்போது இவர் சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் வருகிற தீபாவளிக்கு ரிலீசாக உள்ளது. மேலும் நடிகர் சதீஷ் நாய் சேகர் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாக இருக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
#nationaldaughtersday 😍😍😍 pic.twitter.com/4pwqcNiR2E
— Sathish (@actorsathish) September 25, 2021
கடந்த 2019-ஆம் ஆண்டு சதீஷுக்கு சிந்து என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து கடந்த வருடம் இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் சதீஷ் தனது மகளுடன் கொஞ்சி விளையாடும் வீடியோ ஒன்றை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த அழகிய வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.