Categories
மாநில செய்திகள்

செம குட் நியூஸ்…. அரசு சார்பில் தரப்படும் ரூ.10 லட்சம் பெற….உடனே முந்துங்கள் இதுவே கடைசி தேதி….!!!

தமிழகத்தில் தொடக்க நிலையில் உள்ள புத்தொழில் நிறுவனங்களை மேம்படுத்த அரசு சார்பில் தரப்படும் ரூ.10 லட்சம் பெறுவதற்கு 11-ஆம் தேதி தேதி கடைசி நாள் ஆகும்.

தமிழக அரசின் அடிப்படை நோக்கம் தமிழ்நாடு உலக அளவில் முதலீட்டு ஈர்ப்பு மையமாகவும், புத்தொழில் தொடங்குவதற்கு ஏற்ற களமாக இருக்க வேண்டும் என்பதே ஆகும். இதனை அடிப்படையாகக் கொண்டு தமிழ்நாட்டில் புத்தொழில் மற்றும் புத்தக செயலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் தொடக்க நிலையில் உள்ள தொழில் நிறுவனங்களை தகுதி வாய்ந்த நடுவர் குழு மூலம் தேர்வு செய்து ஆரம்பகட்ட சுகாதார நிதியாக தமிழக அரசு சார்பில் ரூ.10 லட்சம் வழங்கப்படுகிறது.

இந்நிலையில் ராமேஸ்வரம் அருகில் உள்ள தாமரைக்குளம் எனும் மீனவ கிராமத்தை சேர்ந்த மோகன் என்பவர் நிதிசார் தொழில்நுட்ப தொழில் நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறார். இந்நிறுவனம் 10 லட்சத்தை பெற்ற நிறுவனங்களில் இதுவும் ஒன்றாகும். மேலும் 19 புத்தொழில் நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அந்த நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் வீதம் ஆதார நிதியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 23.12.2021 அன்று  வழங்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக புத்தொழில் நிறுவனங்களுக்கான ஆதார நீதி வழங்கப்பட உள்ளது.

இந்தநிதி தொடக்க நிலையில் உள்ள புத்தொழில் நிறுவனங்கள் தங்களை நிலைப்படுத்திக் கொள்ளவும், வளர்ச்சியை நோக்கி முன்னெடுக்கும் உதவியாக இருக்கும். இந்நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியாக சிவராஜா ராமநாதன் பொறுப்பேற்ற பின்பு முதல் மிகப்பெரிய முன்னெடுப்பு ஆகும். தற்போது மானிய தொகை பெற விரும்பும் நிறுவனங்கள் www/startuptn.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் இது சம்பந்தமான வழிகாட்டுதல்கள் மற்றும் தேர்வு செயல்முறைகளைப் பற்றி இந்த இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம். இதற்கு விண்ணப்பிக்க 11-ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

Categories

Tech |