கொரோனா பெருந்தொற்று காரணமாக பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான பி.எம்.கேர்ஸ் திட்டத்தின் கீழ் பயன்களை இன்று காலை காணொலிக் காட்சி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். பள்ளி செல்லும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை பிரதமர் அளித்தார். இந்த நிகழ்ச்சியின் போது குழந்தைகளுக்கான பி.எம்.கேர்ஸ் கணக்கியல் புத்தகம் மற்றும் ஆயுஷ்மான் பாரத்- பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் கீழ் சுகாதார அட்டை குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து பேசிய பிரதமர், சுதந்திர போராட்ட வீரர்களின் வாழ்க்கையிலிருந்து குழந்தைகள் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் துணை நிற்கிறார்கள் குழந்தைகளின் அன்றாட செலவுகளுக்கு மாதம்தோறும் 4 ஆயிரம் வழங்க ஏற்பாடு செய்யப்படும். பெற்றோர் வழங்கிய அன்பையும், பராமரிப்பையும் யாராலும் ஈடு செய்து விட முடியாது என்று பேசியுள்ளார்.