Categories
மாநில செய்திகள்

செம குட் நியூஸ்…. தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு தற்செயல் விடுப்பு…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!

உலக மக்கள் அனைவரையும் கொரோனா தொற்று அதிகமாக பாதித்து வருகிறது. இதனால் சுமார் 2 ஆண்டுகளுக்கு மேலாக, இப்பிரச்சினை முற்றிலுமாக கட்டுப்படுத்த முடியாமல்  உலக நாடுகள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் பலவித தடுப்பு முறைகள் அமல்படுத்தப்பட்டாலும்,கொரோனா தொற்று  குறைந்துள்ளதே தவிர, முழுமையாக இன்னும் முடிவடையவில்லை என்பது நிதர்சனமான உண்மை.

அதிலும் அரசு ஊழியர்களுக்கு தான் இந்த கொரோனா பாதிப்பானது உறுதி செய்யப்பட்டு வருகிறது. ஏனென்றால் அரசு ஊழியர்கள் தான் எவ்வித அச்சமும் இல்லாமல், அரசு பணிகளில் எந்தவிதமான தடைகளும் ஏற்பட்டு விடாமல் இருக்க முழு ஈடுபாட்டுடன் பணியாற்றி வருகின்றன. இந்த நிலையில் தமிழக அரசிடம் காரைக்குடியை சேர்ந்த சி.செந்தில்குமரன் என்ற நபர் அரசு ஊழியர்கள் கொரோனவால் பாதிக்கப்பட்டால், அவர்களுக்கு விடுப்பு வழங்குவது குறித்த மனு ஒன்றை அனுப்பி இருந்தார்.

இந்த மனுவிற்கு பதிலளித்த மனிதவள மேலாண்மை துறை கூடுதல் செயலாளர் (பொறுப்பு) அகிலா கூறியுள்ளதாவது, ஒரு அரசு ஊழியருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டு, பாதிக்கப்பட்டு இருந்தால் அதற்குரிய மருத்துவரின் ஆலோசனைப்படி, அவர் சிகிச்சை பெற்று வந்த நாட்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட நாட்கள் முழுமைக்கும் மருத்துவ சான்றிதழ் அடிப்படையில் சிறப்பு தற்செயல் விடுப்பு அளிக்க படுவதாக தெரிவித்துள்ளார். மேலும் நோய்த்தொற்று அதிகமுள்ள இடங்களில் தடைசெய்யப்பட்ட பகுதி என அறிவித்திருந்தால், அதற்குரிய அறிவிப்பினை சமர்ப்பித்து அவ்வாறு  தடைசெய்யப்பட்ட நாட்களை, சிறப்பு தற்செயல் விடுப்பாக அனுமதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |